Search Engine Submission - AddMe

2006 முதல் 2009 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு

 
பேரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
*
சென்னை, அண்ணா நகரில் அமைப்புசாரா வாரியம் மற்றும் தொழிலாளர் துறைக்கு தனி கட்டிடம் கட்டப்படும். இதற்கான செலவை தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர் நலவாரியம் ஏற்கும்.
* தொழிலாளர் துறையின் எல்லா செயல்பாடுகளையும் கணினி மயப்படுத்தி, மின் ஆளுகை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த, தொழிலாளர் துறை நிர்வாகத்தில் மின் ஆளுகை திட்டம் 'லீட்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 60 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 3 ஆண்டு தொடர்ந்து உறுப்பினராகவும் இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* தொழிலாளர் நலவாரியம், பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களின் திருமணம் அல்லது மகன், மகளுடைய திருமண உதவியாக ஆணுக்கு ரூ.3000ம், பெண்ணுக்கு ரூ.5,000 வழங்கப்படும்.
* கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் தலைக்கவசம் வழங்கப்படும்.
* சலவை தொழிலாளர், முடித்திருத்துவோர், காலணி, தோல் பொருட்கள், பொற்கொல்லர் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் செய்ய தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும்.
* 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மீண்டும் இந்த ஆண்டு புதுப்பித்துக் கொள்ள சலுகை அளிக்கப்படும். இதன்மூலம் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
* தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
நன்றி:தினகரன்